
புதுச்சேரி மாவட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் அயராது தேர்தல் பணியாற்றி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், இந்த இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், புதுச்சேரியில் ஆட்சி மேலும் பலப்படும் என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.

