அரசியல்

அரசியல் நாகரீகம் திமுகவில் அழிந்துவிட்டது – அமைச்சர் ரமேஷ்

சென்னை திருவொற்றியூர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மழைநீர் வடிகால்வாய்களை விரைந்து தூர்வாரவும், தேவையான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், திமுகவில் அரசியல் நாகரீகம் அழிந்து விட்டதாகவும், அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும் அவதூறையும் பேசுவதையே திமுகவினர் வேலையாக வைத்திருப்பதாகவும்  விமர்சித்தார். மேலும், ஆபாசம் மற்றும் அவதூறு பேச்சுகளே திமுகவின் கொள்கையாக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button