
வ.உ.சி சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள அவரது சிலைக்கு, திண்டுக்கல் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இரட்டை வேடம் போடுவதாகத் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யசோதா உள்ளிட்டோர் மாற்று சபாநாயகராக அமர்ந்துள்ள நிலையில் சத்தியபாமாதான் முதன் முதலில் அமர்ந்த பெண் மாற்று சபாநாயகர் என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறான தகவல் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.


