
கிருஷ்ணகிரி, மத்தூர் அருகே சிவம்பட்டியை சேர்ந்தவர் பிரதாப் (41). இவர் குவாரியை விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் பெறுவதற்காக அனுமதி பெறுவதற்காக ஓசூரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமனை அணுகியுள்ளார். அனுமதி தர லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கேட்ட அதிகாரி புருஷோத்தமன் கைது செய்யப்பட்டுள்ளார். புருஷோத்தமனுக்கு இடைத்தரகராக செயல்பட்ட சேலம் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச பணத்தில் சிவக்குமார் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்கியதாக தகவல் கூறப்படுகிறது.
சேலம் தாசநாயக்கன்பட்டியில் பிரமாண்ட பங்களா கட்டியுள்ளார். சேலத்தில் இடைத்தரகர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 மணி நேரம் சோதனை நடத்தினர். சிவகுமாரின் பங்களாவில் நடந்த சோதனையில் 7 கிலோ தங்கம், ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.