
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்புராஜ், பட்டாசு கடை உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தார். அப்போது தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பதாகக் கூறி மன உளைச்சலுடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், மாற்றுத்திறனாளி சுப்புராஜிடம் தீயணைப்புத்துறை சார்பில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் கேட்டதாக தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, செந்தூர்பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை துணை இயக்குநர் குமார் உத்தரவிட்டுள்ளார்.




