செய்திகள்

சென்னை : பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து



சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம் பகுதியில் குமரேசன் என்பவர், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் பழைய பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்ஸி, கிரைன்டர் போன்ற மின்னனு சாதனங்களை வாங்கி, அதனை தரம்பிரித்து விற்பனை செய்கிறார். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த இரும்பு கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் தீ மளமளவென எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மேலும், இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button