
காமாரெட்டி அருகே பழைய தேசிய நெடுஞ்சாலையில் நெருங்கிய நண்பர்களான ஹேமந்த் மற்றும் லோகேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, இரண்டு கார்களுக்கு இடையே எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் சிக்கியதில் 9ஆம் வகுப்பு படித்து வரும் ஹேமந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு நண்பரான லோகேஷ், பலத்த காயமடைந்த நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை சிறுவன் ஒருவர் ஓட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



