


காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள்கல்வி மற்றும் விரிவாக்கத்துறையும், காந்திகிராம அறக்கட்டளை–லெட்சுமி சேவா சங்கமும் இணைந்து, வலையப்பட்டியில் 05.09.2026 அன்று கிராமப்புற மக்களுக்கான சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாமை நடத்தின.
நிகழ்ச்சியில் இந்திய அறிவுசார் அமைப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் கே. கேசவ ராஜராஜன் தொடக்க உரையாற்றினார்.

வாழ்நாள்கல்வி மற்றும் விரிவாக்கத்துறைத் தலைவர் பேராசிரியர் ஆர். வெங்கடரவி வாழ்த்துரை வழங்கினார். மேலும், லெட்சுமி சேவா சங்கத்தின் ஆயுர்வேத சிறப்பு மருத்துவர் டாக்டர் சி. பிரதீப் மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுரையாற்றினார். வலையப்பட்டி ஊர் பெரியவர் திரு. குழந்தைவேல் மற்றும் ஊர் தலைவர் திரு. ஐய்யர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முகாமில் கிராமப்புற மக்களுக்கு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு முகாமின் பயன்களைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியை வாழ்நாள்கல்வி மற்றும் விரிவாக்கத்துறையைச் சேர்ந்த முனைவர் எஸ். ஞானசரண்யா, முனைவர் எஸ். ரமேஷ், திரு. தங்கமுத்து மற்றும் திரு. வாசுதேவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்
