
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாவும், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த காயத்ரியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு காயத்ரி மதம் மாறி கதீஜா என பெயரை மாற்றிக் கொண்டு கணவருடன் வசித்து வந்தார். பின்னர், திருமணமாகி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் கதீஜா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலறிந்து வந்த காயத்ரியின் பெற்றோர் மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



