செய்திகள்

முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலை விலை உயர்வு – ஒரு கட்டு ரூ.3,500 வரை விற்பனை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வாழை மார்க்கெட்டில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலைகளின் விலை உயர்ந்துள்ளது.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால் வாழை இலைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வாழை இலைகளை அறுவடை செய்து மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர். சிறிய ரக வாழை இலைகள் 200 எண்ணிக்கைக் கொண்ட ஒரு கட்டு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையும், பெரிய ரக வாழை இலைகள் ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.3,500 வரையும் விற்பனையானது.
தேவை அதிகரித்துள்ளதால் வழக்கத்தை விட விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். முகூர்த்த தினம் முடிந்த பிறகு வரத்து மற்றும் தேவையைப் பொறுத்து விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button