
தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமாரை கண்டித்தும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார், மாணவர் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை முடக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தொடர்பாக விசாரணை நடத்த அறிக்கை அனுப்பியதாகவும் குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமைச் செயலாளர் சாய் குமாரை கண்டித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பி, அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதில் மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன், மாநகர செயலாளர் முத்து, மாநில குழு உறுப்பினர் பூமயில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

