
கும்பகோணம் அருகே ஆதனூர் கிராமத்தில், த.வெ.க கிளை செயலாளர் பதவிக்களுக்கான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், யார் யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதில் த.வெ.க கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



