செய்திகள்

பெரம்பலூர் : லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது

பெரம்பலூரில் தற்காலிக மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குன்னம் அருகே காடூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், தனது வீட்டுமனையில் வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அப்போது இணைப்பு வழங்க மின் பொறியாளர் ரகுமான் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்கப்பட்டதாக பழனிவேல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் மின் பொறியாளர் ரகுமான் மீது புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, போலீசார் அறிவுறுத்தலின்படி உதவி மின் பொறியாளர் ரகுராமனிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் மின் பொறியாளர் ரகுராமனை கைது செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button