
கடலூர் மாவட்டம் நகரப்பாடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லாததால், சுமார் 13 ஆயிரம் நெல் மூட்டைகள் மேடு, பள்ளமான பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நெல் மூட்டைகளை சரியாக அடுக்கி வைக்க முடியாத நிலையில் நெல் மூட்டைகள் நாள்தோறும் சரிந்து அருகில் உள்ள குளத்தில் விழுந்து தண்ணீருக்குள் மூழ்கி சேதமடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

