செய்திகள்

ஆந்திரா : ஆசிரியர் அறைந்ததில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 6 வயதுடைய பிரணய் தேஜ் என்ற மாணவன், யு.கே.ஜி படித்து வந்தான். இவன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என கூறி, ஆசிரியர் அவனது கன்னத்தில் அறைந்ததோடு சட்டையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் பயந்து நடுங்கிய சிறுவன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தான். இச்சம்பவம் பள்ளி வகுப்பறையில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button