திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் , பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS உத்தரவின் பேரில் ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா IPS நேரடி மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளர் மாயா ராஜலட்சுமி , சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு – பழனி பைபாஸ் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
மேற்படி சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரையும் அருகில் நின்றிருந்த இரண்டு நபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். கொட்டப்பட்டு ஜெயம்நகர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் பாண்டியராஜன் மற்றும் பஞ்சம்பட்டி மடத்து அந்தோணியார் தெரு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கஸ்பார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் இன்னோவா காரை சோதனை செய்ததில் பதுக்கி விற்பனை செய்யும் நோக்கத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இன்னோவா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட இருவரையும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் தொடர்பாக 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3570 கிலோ பொருட்கள் கைப்பற்றப்பட்டு 344 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அளித்த பேட்டி