க்ரைம்
Trending

வாரிசு அடிப்படையில் காத்து இருப்பவர்களுக்கு பணி வழங்கி விட்டு கரூர் மக்களுக்கு வழங்கினால் சரியாக இருக்கும்.

பகல் 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு இரவு 7 மணிக்கு வந்தது இறப்பு ஏற்பட்டது என சென்னை விமான நிலையத்தில் நைனார் நாகேந்திரன் பேட்டி.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர், நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

கரூரில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான 3085 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தந்து உள்ளனர்.லஞ்சம் இல்லை என்ற முதலமைச்சர் முதன் முதலாக லஞ்சத்தை ஆரம்பித்து உள்ளார். 41,பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் எந்தவித அட்சபனை கிடையாது. போக்குவரத்து,
மின்சார துறை, வருவாய் துறை ஆகியவற்றில் வாரிசு அடிப்படையில் நிறைய பேருக்கு பணி தர வேண்டி இருக்கிறது. இதை கொடுத்து விட்டு அதை தந்தால் தான் சரியாக இருக்கும்.

எல்லா துறைகளிலும் லஞ்சத்தை ஆரம்பித்து உள்ளது வேதனைக்கு உரியது.ஜோசப் விஜய் பேச்சுகள் இந்துகள் மனது புண்படும் படியாக இருந்தது.
இது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. பகல் 12 மணிக்கு வரேன் என்று சொல்லிவிட்டு இரவு 7 மணிக்கு ஏன் வந்தார். ஆதனால் தான் இவ்வளவு சம்பவங்கள் நடந்தது.என இவ்வாறு அவர் கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button