க்ரைம்
Trending

இருடியம் தருவதாக 19 லட்சம் மோசடி, ஒருவர் கைது – ரூ.10 லட்சம் பணம், 3.1/4 பவுன் தங்க நகை பறிமுதல்

திண்டுக்கல், பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரிடம் தாராபுரத்தை சேர்ந்த சக்திவேல்(51) என்பவர் இருடியம் வைத்திருப்பதாகவும் கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி, பழனி பேருந்து நிறுத்தம் அருகே ரூ.19 லட்சம் பெற்றுக் கொண்டு இருடியம் இருப்பதாக போலி பையை கொடுத்து மோசடி செய்ததாக பரமேஸ்வரன் புகார் அளித்தார்.

இது குறித்து மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பழனி DSP.செல்வகுமார் மேற்பார்வையில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு தாராபுரத்தில் பதுங்கி இருந்த சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் 3.1/4 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button