கோக்கு மாக்கு

உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

கரூர் சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை மறைத்து விஜய் பேசி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார். மதியம் 12 மணிக்கு பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாகவே விஜய் கரூர் வந்ததாகவும், காலை 9 மணி முதலே பொதுமக்கள் அங்கு காத்திருக்க வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதை திசைதிருப்பும் வகையில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தது, போதிய குடிநீர் வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பலர் அடுத்தடுத்து மயக்கமடைந்ததாகவும் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். மயக்கமடைந்தவர்களை உடனடியாக மீட்காமல், விஜயைப் பார்க்கும் ஆர்வத்தில் சிலர் அவர்களை மிதித்துக்கொண்டு முன்னேறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

குடிநீர் வசதி இல்லாததும் அதேபோன்று அங்கு பெண்களுக்கு தேவையான கழிப்பறை வசதி கூட செய்யப்படவில்லை

100 கும் மேற்பட்டவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், 60 பேர் உயிர் காப்பாற்றப்பட்டு அவர்களில் 41 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையிலும் வேறு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் வரவழைத்து சம்பவ இடத்தில் மக்களை காப்பாற்றியது திமுகவினர்தான் என்றும், விஜய் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டதாகவும், மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைக்கூட சந்திக்கவில்லை என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் வசனங்களை முதலமைச்சர் பேசி கொண்டு இருக்கிறார் எழுதிக் கொடுத்தவர்களை தான் கேள்வி கேட்க வேண்டும் என்று விமர்சித்தார்

கரூரில் விஜய் திமுக ஊழல் ஆட்சி என்றும் அமைச்சர்கள் ஓடி ஒளிகிறார்கள் என்றும் கூறியதை பற்றி தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த வழக்கறிஞர்கள் தற்பொழுது மூத்த அமைச்சர்கள் லஞ்சம் வாங்கியதாக மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் அதை பற்றி அவரிடம் கேட்டால் அவர்கள் பதில் கூறுவார்கள் தெரிவித்தார் …

இதுபோன்ற சம்பவங்களில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதில் முரண்பாடு இருப்பதாக இதற்கு முந்தைய சம்பவங்களில் உயர் நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது. இந்நிலையில் அரசு பணி கொடுக்கப்படுவது ஏற்புடையதல்ல என்றார்…

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button