கோக்கு மாக்கு
Trending

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மலைவாழ் குடியுரிமை சான்றுகள் நலவாரிய சான்று குடிநீர் மின்சாரம் சாலை மற்றும் வீடு வீட்டுமனை பட்டா சுடுகாடு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித் தரக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்

பழங்குடி மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்படும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பழங்குடியின மக்களின் அடிப்படை கோரிக்கையான குடும்ப அட்டை 100 நாள் அட்டை ஜாதி சான்று நலவாரியாட்டை குடிநீர் வசதி மின்சார வசதி சாலை வசதி தொகுப்பு வீடுகள் குடிமனை பட்டா மற்றும் சுடுகாடு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் இதுவரை செவி சாய்க்காததால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகீட்டு தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தற்போது மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்கே பேட்டை திருத்தணி திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பொன்னேரி ஆவடி பூந்தமல்லி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு தற்பொழுது தமிழக அரசுக்கு எதிராகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button