
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொது சுகாதாரம் தொடர்பான தூய்மை இந்தியா திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாக கருதி பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் ஒதுக்கி மாநில அரசுகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதற்கென மாநில உள்ளாட்சி அமைப்புகளால் முறையாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை மேற்கொள்ள திமுக கட்சியை சேர்ந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளரும் திண்டுக்கல் மாநகராட்சி 39- ம் பகுதி மாமன்ற உறுப்பினரும் ஆன பிலால் உசைன் நடத்திவரும் BPA நிறுவனம் ஒப்பந்தம் பெற்று ஒரு ஒருங்கிணைப்பாளர் நான்கு மேற்பார்வையாளர் இருபத்திநான்கு பரப்புரையாளர்களை கொண்டு பணிகளை 2021- ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றார்


இந்நிலையில் பரப்புரையாளர்களாக பணியாற்றிவரும் ஒப்பந்த பணியாளர்கள் இருபத்திநான்கு பேரும் தங்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயித்த சம்பள தொகையான 16,817 ரூபாய் இதில் ESI மற்றும் PF பிடித்தம் போக 14,673 ருபாய் தொகையை எங்களது வங்கிக்கணக்கில் செலுத்தாமல் வெறும் 7300 ரூபாயை கையில் ரொக்கமாக வழங்கி வந்துள்ளனர் என்றும்

தெரிய வந்தனை அடுத்து கடந்த 16.05.2026 அன்று இருபத்திநான்கு பெரும் கையெழுத்திட்ட புகார் மனுவினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் , நகராட்சி நிர்வாகத்துறை , லஞ்ச ஒழிப்புத்துறை , மனித உரிமைகள் ஆணையம் உட்பட ஆறு துறைகளுக்கு புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பணியாளர்களில் ஒருவர் திமுக-வை சேர்ந்த 3-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் மாநகராட்சியின் பொது சுகாதார குழு தலைவருமான இந்திராணி விஜயன் அவர்களிடம் அளிக்கப்பட புகாரினை தொடர்ந்து இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தனது சொந்த கட்சியை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் பதவியில் இருப்பவர் என்றும் பாராமல் சம்மந்தப்பட்ட BPA நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்
இனி வரும் காலங்களில் ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையை நேரடியாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும் என்றும் சம்பள தொகைக்கான சம்பள ரசீது கட்டாயம் வழங்க நடவடிக்கை எடுத்திடவும் கோரிக்கை விடுத்துள்ளார்