
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி சண்முகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராணி.
அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னலை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, திமுக தலைமை கழக பேச்சாளர் முருகவேல் அந்த பகுதி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் வெள்ளி நாணயம் போன்றவை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது யுவராணி, இத்தனை வருட அரசியலில் எதுவும் செய்யவில்லை இப்போது இரண்டு நாட்களாக தூக்கத்தை கெடுக்கும் வகையில் இவ்வாறு செய்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக தலைமை கழக பேச்சாளர் முருகவேல் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.
எனவே, முருகவேலை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் அதிகாலையில் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.