க்ரைம்
Trending

தனியார் திரையரங்க பகுதி முழுவதும் ஜனநாயகன் பட பேனர் சர்ச்சை – மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தகவல்

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திரையரங்கில் இன்று ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனையொட்டி அப்பகுதி முழுவதும் ரசிகர்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், திரையரங்கு அருகே வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட பேனர்கள் அதற்கான கட்டணப் பில்களும் பேனர்களில் ஒட்டப்பட்டுள்ளன.

இருப்பினும், மேலும் 50-க்கும் மேற்பட்ட பேனர்கள் மாநகராட்சி அனுமதி பெறாமலும், கட்டணப் பில்கள் ஒட்டப்படாமலும் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தி கோட்’ (The GOAT) திரைப்படத்தின்போது 20 பேனர்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவை மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டதாகக் கூறி அதிகாரிகளால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வைத்துள்ள பேனர் சர்ச்சை குறித்து திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில்,

“‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேனர்கள் வைக்க 20-க்கும் மேற்பட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் திரையரங்கம் அமைந்துள்ள பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது மேலும் புகார்களும் வந்துள்ளன.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விதிமுறைகளை மீறிய பேனர்கள் வைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button