செய்திகள்

ராஜஸ்தான் : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்

கிழக்கு ராஜஸ்தான் மாநிலம், சவாய் மாதோபூர் பகுதியில் திடீரென கனமழை பெய்ததால், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வெள்ளம் சூழ்ந்த சாலையை கடக்க முயன்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்துடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும், சற்றும் தளராமல் போராடிய அவர் ஒருவழியாக கரையை அடைந்து உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button