நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் இந்தப் படத்தை வரவேற்க ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகள் முன்பு திரண்டனர்.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி, பட்டாசுகள் வெடித்து வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல் ராஜேந்திரா திரையங்கு முன் விஜய்யின் 100 அடி கட்-அவுட்களுக்கு கட்டி மதிருவிழா போல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். திரையரங்குகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘ஜன நாயகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
