கோக்கு மாக்கு
Trending

வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்

வெள்ளி நாணயம், பால் பாக்கெட்களுடன் கூடிய 2 கண்டெய்னர், 2 கார், 7 டாட்டா ஏஸ் வாகனங்களை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த அ.தி.மு.க-வினர்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் திமுக வேட்பாளர் வீரா S.T.சாமிநாதன் சார்பாக பால் பாக்கெட்டில் சத்தியம் வாங்கி வாக்காளர்களுக்கு வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தகவல் அறிந்த அ.தி.மு.க-வினர் பாளையம் பேரூராட்சி பகுதிகளில் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக 2 கண்டெய்னரில் வைத்திருந்த பால் பாக்கெட்டுகள், வெள்ளி நாணயங்கள், 2 கார், 7 டாட்டா ஏஸ் வாகனங்களைப் பிடித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button