கோக்கு மாக்கு
Trending

ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்

பண பட்டுவாடா பிரச்சனை

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026 நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று திமுக சார்பாக வாக்காளர்களுக்கு நான்காயிரம் ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் தரப்படுவதாகவும் அதனை அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் தராமல் ஏமாற்றி விட்டதாகவும் ஐ பெரியசாமி வீட்டு முன்பு பொதுமக்கள் கூச்சலில் ஈடுபட்டனர் .

பின்பு சரியான பதில் அளிக்காததால் அங்கிருந்து பொதுமக்கள் திடீரென அந்தப் பகுதியில் உள்ள சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் எனவே சம்பவம் அறிந்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை விரட்டி அடித்தனர் மேலும் கலைந்து செல்ல விடில் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டல் விடுத்தனர்.

அதனையும் பொருட்படுத்தாதே தங்களை ஏன் அலைக்கழிக்க வேண்டும் எனக் கூறி இரண்டு பெண்கள் மட்டும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் செய்தி எடுத்த பத்திரிக்கையாளர்களின் மீதும் திமுகவினர் எந்த பத்திரிகை நீ என்ன செய்து விட முடியும் என கூறி மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இறுதியாக பொதுமக்களிடம் ஆறுதல் கூறி காவல் துறையினர் கூட்டத்தை கலைய செய்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button