க்ரைம்
Trending

100 மார்க் மட்டும் போதாது; திறமையும் அவசியம் – எதிர்கால சவால்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

100 மதிப்பெண்கள் எடுத்தேன், முதல் குரூப் தேர்வு செய்தேன், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன்” என்பவை மட்டுமே இனி வாழ்க்கை வெற்றிக்கான உத்தரவாதமாக இருக்காது என கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன், மெஷின் லேர்னிங் மற்றும் டிரைவர்லெஸ் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பாரம்பரிய வேலைவாய்ப்புகள் கணிசமாக மாறி வருகின்றன.
ஒருகாலத்தில் வேலைக்கு மனிதர்கள் தேவைப்பட்ட நிலையில், தற்போது ஒரு நபரால் பலரின் வேலையைச் செய்ய முடியுமா என்பதே நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

நிபுணர்களின் கருத்துப்படி, எதிர்கால உலகில் வெற்றிபெற கல்வி மட்டுமல்லாமல் திறமை, உடல் ஆரோக்கியம், மன உறுதி மற்றும் பொருளாதார அறிவு ஆகிய ஐந்து அம்சங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டாலும் வாழ்க்கைப் பயணத்தில் சவால்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக நாடுகள் தற்போது வெப்பமயமாதல், குடிநீர் பற்றாக்குறை, உணவு தட்டுப்பாடு, வேலைவாய்ப்பு நெருக்கடி, பொருளாதார மந்தநிலை மற்றும் போர் பதற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.
இவை வெறும் பாடப்புத்தகங்களில் படிக்கும் விஷயங்கள் அல்ல; இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தில் நேரடியாக சந்திக்கக்கூடிய சவால்கள் என்றும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுவான பட்டப்படிப்புகள் மட்டும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் காலம் மாறிவிட்டதாகவும், தொழில்துறை நிறுவனங்கள் தற்போது பட்டங்களை விட திறமைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக Coding, AI Tools, Communication Skills, English Fluency, Technology Adaptation போன்ற திறன்களை மாணவர்கள் இப்போதே வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
மேலும், ITI மற்றும் திறன் சார்ந்த தொழிற்கல்விகள் குறைவான கல்வி அல்ல என்றும், எதிர்காலத்தில் Electrician, Robotics Technician, CNC Operator, Solar Technician, Automation Expert போன்ற தொழில்நுட்ப திறன் கொண்டவர்களுக்கு அதிக தேவை உருவாகும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் மொபைல் போன் அடிமைத்தனம், சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுதல், உடல்நலத்தை புறக்கணித்தல் போன்ற பழக்கங்களில் இருந்து விலகி, கணினி அறிவு, ஆங்கிலப் புலமை, பொதுப் பேச்சுத் திறன் மற்றும் நிதி மேலாண்மை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“பிளஸ் டூ என்பது பள்ளி வாழ்க்கையின் தொடர்ச்சி அல்ல; வாழ்க்கையின் முதல் போர்க்களம்” என்ற கருத்தை உணர்ந்து, மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை திட்டமிட்டு உருவாக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் முக்கிய அறிவுரையாகும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button