கோக்கு மாக்கு
Trending

மரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நோட்டிஸ் அனுப்பிய வனத்துறை – வராமல் காலத்தை கடத்தும் மர கடத்தல் கும்பல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன மாவட்டத்தில் உள்ள மேல்மலை பகுதியான மன்னவனூர் வளச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி பச்ச மரங்களை வெட்டி கடத்திய நான்கு நபர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் மரங்களை வெட்டி கடத்துவதற்கு பயன்படுத்திய பத்துக்கும் மேற்பட்ட லாரி மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட வன தலைவரின் உத்தரவின் பெயரில் மன்னவனூர் வளர்ச்சரகர் கடிதம் அனுப்பியும் தற்போது வரை லாரி மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை

கொடைக்கானலைச் சேர்ந்த 11லாரிகள் எஸ் எம் எஸ் இரண்டு லாரி , ரூபி இரண்டு லாரி , அஸ்லாம், DMS, நூர், விஷ்ணு, பிவிக் உள்ளிட்ட 11லாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்யாமல் வனச்சரகர் மற்றும் வன அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட மரக்கடத்தல் நபர்களிடம் மிகப்பெரிய தொகையை வாங்கிக் கொண்டு லாரி ஜப்தி செய்யாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் மரக்கடத்தல் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போது வரை பதினோரு லாரிகளும் கொடைக்கானல் மலையில் இருந்து பெருமாள் மலை சோதனை சாவடி , வத்தலகுண்டு சோதனை சாவடி , பழனி சோதனை சாவடி வழியாக தொடர்ந்து சென்று வருகிறது. வனத்துறை சார்பாக அதிநவீன சிசிடிவி வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி இத்தனை லாரிகளும் மேல்மலையிலிருந்து பழனி வழியாகவும் வத்தலகுண்டு வழியாகவும் எப்படி செல்கிறது என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது

நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் வனத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்ட கொடைக்கானல் பகுதியில் சேர்ந்த காசிம், முகமது சலீம் , அப்துல் காதர், ஜெய்லானி மர கொள்ளையர்கள் நான்கு பேரும் தற்போது வரை வனத்துறையால் கைது செய்யப்படவில்லை வனத்துறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர் தொடர்ந்து மரக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற மரக்கொல்லையார்களால் தற்போது மேல் மலை முற்றிலும் அழிந்துவிட்டது

தமிழக அரசு கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு மட்டும் ஒரு விசாரணை குழுவை அமைத்து 100% தணிக்கை செய்தால் கொடைக்கானல் வன மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வகை அரிய வகை மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதும் வனம் முழுவதும் தரைமட்டமானதும் வெளிச்சத்திற்குவரும். தற்போது விவசாயம் அழிந்து வருவதற்கு இந்த மரக் கொள்ளையர்களும் குறிப்பிட்ட வன அலுவலர்களும் வருவாய் அலுவலர்களும் தான் காரணம் என்றும் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button