
மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று விவசாயிகள் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் இதனை பயன்படுத்தி டிப்பர் லாரியை நிறுத்தும் ஆழத்திற்கு மண் அள்ளும் மணல் கடத்தல் மாபியாக்கள்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட S.குரும்பப்பட்டியிலிருந்து வளவிசெட்டிபட்டி செல்லும் வழியில் உள்ள பூலாங்குளம் சுற்றியுள்ள சேக்கனத்துப்பட்டி , குரும்பப்பட்டி , வளைசெட்டிபட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த பூலாங்குளம் தான் உள்ளது .

மேலும் தமிழக வனத்துறையால் அரியவகை வன உயிரினமான தேவாங்கை காக்கும் நோக்கத்தில் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அய்யலூர் தேவாங்கு சரணாலயத்தில் வெளிவட்ட சுற்றுப்பகுதியில் உள்ளநிலையில் ( தேவங்கு சரணாலய பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் ) வன உயிரினங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த பூலாங்குளம் இருந்து வருகிறது.


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாய பயன்பாடு மற்றும் செங்கல் சூளைகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மண் எடுப்பதாக கூறிக்கொண்டு ஒரு ஜேசிபி இயந்திரம் மூன்று டிப்பர் லாரிகள் மற்றும் இரண்டு டிராக்டர்களை கொண்டு இரவு பகல் என தொடர்ந்து குளத்தை தோண்டி குளத்தின் கரைகள் சேதமடையும் அளவிற்கு ஒரு இடத்தில் 4000 சதுர மீட்டருக்கும் அதிகமாகவும் குளத்தின் மற்றுமொரு இடத்தில் 2000 சதுர மீட்டர் சுற்றளவுக்கு மேலும் சுமார் பத்து முதல் இருப்பது அடி ஆழம் வரை தோண்டி எடுத்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் கூகுள் மேப் செயலியிலேயே தெரியும் அளவிற்கு மண் திருட்டு நடைபெற்றுள்ளது








ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டம் முழுவதுமே மழைப்பொழிவு குறைந்து நீராதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பல பகுதிகள் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற நீராதார பகுதிகளில் மண் கடத்தல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் மீது மாவட்ட நிர்வாகம் , கனிமவளத்துறை , வனத்துறை , வருவாய்த்துறை உட்பட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.