
சிவகங்கை அருகே ஏனாதி பகுதியில் சிவகங்கை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரைக்காலில் இருந்து பொட்டாசியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளது.
இந்த விபத்தின் தாக்கத்தில் லாரியின் டேங்கில் இருந்த டீசல் சாலையில் பெருமளவில் கொட்டியது. இதனால் தீப்பற்றும் அபாயம் ஏற்பட்டது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், லாரியைச் சுற்றிலும் நுரை தெளித்து தீ விபத்து ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

