க்ரைம்

அரசு மருந்தகத்தில் பெண் ஊழியருக்கு கத்திக்குத்து – மதுபோதையில் வந்த வாலிபர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் செயல்பட்டு வரும் அரசு முதல்வர் மருந்தகத்தில் இரண்டு ஆண்டுகளாக திவ்யா என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் பணிக்கு வந்த திவ்யாவை, மது போதையில் மருந்தகத்திற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த திவ்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அப்பொழுது, அருகில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து, கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வாலிபரை பொதுமக்கள் அறைக்குள் வைத்து  பூட்டி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடைப்படையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button