
கேரள மாநிலம், கோட்டையத்தை சேர்ந்த சுனில், நண்பர்களுடன் துாத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த, மனநலம் பாதித்த பெண் ஒருவரை, நேற்று அதிகாலை ஏமாற்றி, மறைவிடத்திற்கு அழைத்து சென்று, சுனில் பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இதையடுத்து, பெண்ணின் தாய் நீண்ட நேரமாக தன் மகளை காணாததால் தேடியுள்ளார். அப்போது அவருக்கு, மகள் பலாத்காரம் செய்யப்பட்ட விபரம் தெரிய வந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
