
டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.1.88 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது, பயணி அணிந்திருந்த உள்ளாடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கேப்சூல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த கேப்சூல்களுக்குள் வேதியியல் பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தங்கக் கடத்தலின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
