செய்திகள்

கரூர் : பாதியில் நிறுத்தப்பட்ட தரைப்பால பணி வாகன ஓட்டிகள் அவதி

கரூர் மாவட்டம் பைபாஸ் சாலையில், சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், பணிகள் தொடங்கி ஆறு மாதங்களாகியும் இதுவரை முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை. இதனால், பாதி தரைப்பாலமும், பாதி தார்ச்சாலையுமாக சாலை காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் ஆறு மாதங்களாகியும் பணிகள் முன்னேற்றமின்றி இருப்பதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரைப்பாலப் பணியை விரைந்து முடித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button