செய்திகள்

நடிகர் அஜித்துக்கு ரேஸிங் கார் மினியேச்சர் பரிசளித்த முதலமைச்சர் விஜய்



ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடைபெற்ற நடிகர் அஜித்தின் கார் பந்தய நிகழ்வில், தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், சந்திப்பின்போது இருவரும் பரஸ்பரம் பரிசுகளை வழங்கி தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித்துக்கு ரேஸிங் கார் மினியேச்சர் ஒன்றை பரிசாக வழங்கினார்.

அதில், அன்பான சகோதரர் அஜித் என தன் கைப்பட எழுதி, பிரமிப்புடன் விஜய் என கையெழுத்திட்டுள்ளார். அதேபோல், நடிகர் அஜித், முதலமைச்சர் விஜய்க்கு ஹெல்மெட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதையடுத்து, விஜய் – அஜித்தின் இந்த சந்திப்பும், இருவரும் பரிமாறிக் கொண்ட பரிசுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button