செய்திகள்

தந்தை மகனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இன்னாச்சிமுத்து தனது குடும்பத்தினருடன் தேவாலய திருவிழாவிற்கு வேன் ஒன்றில் சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வாக்குவாதம் இறுதியில் முற்றவே இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் தந்தை ,மகனை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கருப்பு கொடி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், இந்த தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை தேசிய நெடுஞ்சாலையை விட்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தற்பொழுது, சாலையில் ஓரமாக நின்றும், அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button