
சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியில் தனியார் மகளிர் கலைக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த கல்லூரியில் நேற்று மாலை கல்லூரி பேருந்து 36 மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஏனாதி விலக்கு, பாப்பாகுடி வெங்கட்டி, கானூர், இடைக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டது.
இதையடுத்து, பேருந்தை பார்த்திபனூரைச் சேர்ந்த ராஜாங்கம் ஓட்டிச் சென்றார். அப்போது ஏனாதி ஒத்த வீடு அருகே சென்றபோது, திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அங்கு அருகில் இருந்தவர்கள் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து மாணவிகளை மீட்டனர்.
பின்னர். ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த ஓட்டுநர் ராஜாங்கம் மற்றும் 6 மாணவிகள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



