
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர், கோடங்குடி பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மங்கைநல்லூரைச் சேர்ந்த மதுபான வியாபாரி முருகவேல் கைது செய்யப்பட்டார். இந்த சட்டவிரோத மது விற்பனையை தடுக்கத் தவறிய, பெரம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகவேலை மணல்மேடு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


