க்ரைம்
Trending

பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இணைப்புச்சாலை பணியினை நிறைவேற்றி கொடுத்த தவெக நிர்வாகி

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொசவப்பட்டி கிராமம் திண்டுக்கல் நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தின் முகப்பு பகுதியில் நுழைவாயில் ஒன்று உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் செல்லும் நுழைவாயில் பகுதி இணைப்பு சாலை பகுதி அகலம் குறைவாகவும் சேதமடைந்த நிலையிலும் இருந்துவந்தது. இது தொடர்பாக இப்பகுதியின் முக்கியஸ்தர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முந்தைய ஆட்சியாளர்களிடமும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் யாருமே கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் தற்பொழுது ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் S.M. நிர்மல்குமார் அப்பகுதி கட்சி நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்டு ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து முழு விபரங்களை கேட்டதுடன் உடனடியாக சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் சாலை ஒப்பந்தக்காரரிடம் பேசி உடனடியாக நுழைவாயில் பகுதி இணைப்பு சாலையை சரிபடுத்துவதுடன் அப்பகுதியில் மட்டும் குறுகலாக உள்ள சாலையை சட்ட விதிகளின்படி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கடந்த சில தினங்களாக இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது பணிகள் குறித்து அவ்வப்போது ஊர் முக்கியஸ்தர்களை தொடர்புகொண்டு கேட்டுவந்த தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஸ்.ம். நிர்மல்குமார் நேற்று பனி நடைபெற்று வந்த கொசவப்பட்டி நுழைவாயில் பகுதிக்கு வந்து பணிகள் குறித்து ஒப்பந்தக்காரரிடமும் கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடித்து தரும்படி கூறினார் அப்போது ஊர் முக்கியஸ்தர்களும் அப்பகுதி கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button