

திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்ட எல்லையில் உள்ள ஈசநத்தம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் வரும் போலி லாட்டரி மாபியா கும்பல் ஒன்று இயங்கி வருகிறது.
சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கூலிகளை குறிவைத்து இயங்கும் இந்த கும்பல் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் கல்லா காட்டுவதாகவும் பரிசுத்தொகையை சரியாக கொடுத்து விடுவதால் இவர்களை நம்பி தினந்தோறும் பலரும் பணத்தை கொடுத்து எண்களை பதிவு செய்து வருகின்றனர் .
தகவல் தெரிந்த செய்தியாளர் சம்பவம் நடக்கும் இடத்திற்கு சென்று வீடியோ எடுத்ததை கண்டா போலி லாட்டரி மாபியா கும்பல் தங்களது இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது .
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஜெயக்குமார் IPS பதவியேற்ற பின்னர் சட்டவிரோத செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது வாடிக்கையாக உள்ளது.