க்ரைம்
Trending

தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திரு சௌ.சரண்ராஜ் தலைமை தாங்கினார் . துணைத் தலைவர் திரு கண்ணன் மாவட்ட செயலாளர் திரு ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவரும், தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாருமாகியா
த.பார்த்தசாரதி சிறப்புரையாற்றினார் .

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

1.அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும்
தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய இளநிலை நிர்வாக அலுவலர் உயர்வு பல்வேறு காரணங்களை சுட்டி காட்டி வழங்கப்படாத நிலையில்
அதற்கு தடையாக இருந்த அனைத்து அம்சங்களும் சரி செய்யப்பட்ட பின்னரும் இன்றைய தேதி வரை இளநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வு வழங்கப்படாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
உடனடியாக இளநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வு வழங்கிடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2.தற்போது அரசு கொள்கை முடிவின்படி மருத்துவத் துறையில் 5,7,10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணி விவரங்கள் சம்பந்தப்பட்ட துறை தலைமை அலுவலகங்களில் இருந்து கோரப்பட்டுள்ளது.

3. பணியிட மாறுதல் செய்வது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப சூல்நிலைகளின் அடிப்படையிலான விருப்ப மாறுதல்கள், மனமொத்த மாறுதல்கள் வழங்கியபின் கல்வி ஆண்டின் இறுதியில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி புதிய கல்வி ஆண்டில் புதிய பணியிடங்களில் பணிபுரியும் வகையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.

4.அமைச்சுப் பணியாளர்களுக்கு குறிப்பாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களில் முறையாக பணி வரன்முறை செய்திட வேண்டும் .

  1. பதுவுறு எழுத்தர் முதல் இணை இயக்குநர் (நிர்வாகம் வரை காலியாக உள்ள அனைத்து அமைச்சுப் பணியாளர் பணியிடங்களையும் உடனுக்குடன் பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும்.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button