க்ரைம்
Trending

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீதும், வழக்கை தாமதப்படுத்தும் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீதும், வழக்கை தாமதப்படுத்தும் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட குறை தீர்வு முகாமில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், தங்களது வீட்டின் அருகே வீடு வாங்கிய கேசவன் என்பவர், தனது மகளிடம் கடந்த 06.06.2026 மற்றும் 27.07.2026 ஆகிய தேதிகளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனது மகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் (குற்ற எண்: 22/2026) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, முறையான விசாரணை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக மனுவில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், செல்வாக்கு மிக்கவரான கேசவன், வழக்கை வாபஸ் பெறக் கோரி சாட்சிகளான தங்களையும், பாதிக்கப்பட்ட சிறுமியையும் தொடர்ந்து மிரட்டி வருவதால் வசிப்பிடத்தில் இருக்க முடியாமல் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறோம்.

எனவே, தங்களுக்கு உரிய சட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், வழக்கை விரைந்து விசாரித்து நியாயம் கிடைக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button