


கொடைக்கானலில் ஜான்சன் பாபு தனியார் ரிசார்ட்டில் ஓட்டுநராக பணியாற்றினார் . அவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், ஓராண்டுக்கும் மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, அவரது சகோதரரும் மனுதாரருமான ராஜன், அவரது தாயார் கேத்தரின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (26.09.2026 ) மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் ராஜன் இவர் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சகோதரர் ஜான்சன் பாபு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக புகார் தாயாருடன் வந்து மனு ஒன்றினை கொடுத்தார்.
கொடைக்கானலில் தற்கொலை செய்து கொண்ட ஜான்சன் பாபு வழக்கில், ஓராண்டுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, அவரது சகோதரரும் மனுதாரருமான ராஜன் சார்பில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேத்தரின் என்பவரின் மகனான ஜான்சன் பாபு, கடந்த 21.08.2025 அன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் குரல் பதிவு மற்றும் குறிப்பில், தன்னை சிலர் அழைத்து மிரட்டியதாகவும், தனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பதிவில் தொழிலதிபர் சூரன் சென் உள்ளிட்ட ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதலில் இந்தச் சம்பவம் தற்கொலை தொடர்பான வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றப்பட்டு, ஜான்சன் பாபுவின் மனைவி சசிரேகா உள்ளிட்ட ஐந்து பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது செல்போன்கள் மற்றும் தேவையான விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த உத்தரவின்படி தேவையான பதிவுகள் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
வழக்கை CBCID விசாரணைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, சம்பவம் நடந்து சில நாள்களே ஆனதால் காவல்துறைக்கு விசாரணை நடத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியதாகவும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, காவல்துறைக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி மனுதாரர் ராஜன் சார்பில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதாகவும், மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கொடைக்கானல் காவல்துறையினரை தொடர்பு கொண்டு, வழக்கு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதாகவும் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
“சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பான வழக்குகளில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் ஆனால், தற்கொலைக்கு முன்பு தனது மரணத்திற்கு சிலர் காரணம் என குறிப்பிட்டு விட்டு தற்கொலை செய்துகொண்ட இந்த வழக்கில், நீண்ட காலமாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே SP அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்” என வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் காவல்துறை விரைந்து விசாரணையை முடித்து, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேட்டி :
1. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர்
2. கேத்தரின் இறந்தவரின் தாயார்