க்ரைம்

திருநெல்வேலி : 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, சின்னகுட்டி, முனீஸ்வரன், முருகேசன் ஆகிய 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். பின்னர் இது குறித்து போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து, விசாரணையின் போது அரசு சார்பில் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் சின்னகுட்டிக்கு தூக்குத் தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button