
திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் மாங்கரை குளத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மண் திருடும் கும்பல் மண் திருடி காமாட்சிபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் குவித்து வைத்து தனியார் செங்கல் சூளை மற்றும் வீடு கட்டும் நபர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது மண் திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடிவிட்டது உடனடியாக போலீசார் மண் திருட்டில் ஈடுபட்ட ஒரு பொக்லைன் இயந்திரம் 3 டிப்பர் லாரிகள் ஆகியவற்றில் பறிமுதல் செய்து மண் திருடும் கும்பலை சேர்ந்த அருண்குமார், கோபால், கிருஷ்ணன், முத்துராம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
