
மானாமதுரையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த இருவர் வாகனத்தை நோட்டமிட்டு கொண்டு அப்பகுதியில் யாரும் இல்லாத நேரத்தில் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் இருசக்கர வாகன உரிமையாளர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.