க்ரைம்

2-வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கல்குவாரியில் தள்ளிக் கொலை – ஒன்றரை ஆண்டிற்கு பின் கணவர் கைது


திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி அமராவதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 2025 மே மாதத்துக்குப் பிறகு அமராவதி பெற்றோருடன் தொடர்பு கொள்ளவில்லை.

இது குறித்து அவரது பெற்றோர் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மகாராஜன் அளித்த தகவலின் அடிப்படையில் பாப்பான்குளம் அருகே உள்ள கல்குவாரியில் தேடுதல் நடத்தப்பட்டது.

அங்கு சேலை, மனித மண்டை ஓடு, தொடை எலும்பு உள்ளிட்ட எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டன. பின்னர், மகாராஜன் 2024-ம் ஆண்டு அகிலா என்பவரை 2-வது திருமணம் செய்ததும், இதற்கு அமராவதி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, 2025 மே மாதம் ஏற்பட்ட தகராறின் போது, அமராவதியை பாப்பான்குளம் கல்குவாரிக்கு அழைத்துச் சென்று தாக்கி, குவாரிக்குள் தள்ளி கொலை செய்ததாக மகாராஜன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர். இதையடுத்து, மீட்கப்பட்ட எலும்புகள் தடய அறிவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அவை அமராவதியுடையதா என்பது அறிவியல் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button