
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பல் ஆனந்த் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆனந்த்தின் உடலைப் பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் இருவர் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் ரூ.200 பெற்றுக்கொண்டு இரவு காவலர் பிணவறைக்குள் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், ஆனந்த்தின் உடலைப் பார்த்த அவரது நண்பர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த மற்ற சடலங்களையும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஆனந்த்தின் நண்பர்கள் இருவரையும், மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

