

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 1-ம் தேதி பிரம்மாண்ட நேரடி இசை நிகழ்ச்சி.
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 1-ம் தேதி மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு, திண்டுக்கல் தி ரேட்னேஜ் கன்வென்ஷன் அண்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது.
அருண் ஈவென்ட்ஸ், மெர்குரி நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் முக்கிய விளம்பரதாரர்களாகவும் சிறப்பு விருந்தினர்களாகவும் மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. சதீஷ் குமார், ஸ்ரீ வாசவி தங்கமாளிகை நிர்வாக இயக்குநர் திரு. மேடா என். ரவி, அனில் ஃபுட்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. கமல் ஹாசன், அரசன் ரியல்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ்திரு., சண்முகம்,திரு. , ஏ.கே. தங்கமாளிகை உரிமையாளர், நாகா ஃபுட்ஸ் தொழில்நுட்ப இயக்குநர் திரு. விஜய் ஆனந்த், வால்யூம் ஜீரோ திரு. மணிவண்ணன், ராயல் கிரீன் புரமோட்டர்ஸ் திரு. செல்வராஜன், அங்குவிலாஸ் திண்டுக்கல் – டாக்டர் செல்லமுத்தையா, திண்டுக்கல் பில்டர்ஸ் அசோசியேஷன் – திரு. ஜனகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.சி.ஆர். டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களைச் சேர்ந்த திரு. எம்.சி. ராபின் மற்றும் திரு. எம்.சி. ரிக்சன், பி.என்.ஐ. நிர்வாக இயக்குநர் திரு. மகேஷ் பி.வி. கிரி, தி ஸ்வாகத் கிராண்டே, முஜிப் பிரியாணி உரிமையாளர் திரு. முஜிபுர் ரஹ்மான், ரெனகான், சென்னை ரைஸ் திரு. ராஜ்குமார், திண்டுக்கல் கேப்டன் பிரபாகரன், கே. கணேசன் & கோ உரிமையாளர் திரு. ஜெயராம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மதுரை மண்டலத் தலைவர் திரு. குமரேசன், பிராண்டிங் பீஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு. விக்னேஷ் வேலுசாமி, வி சோடா, 369 நிறுவனt அருண் மாரேஸ்வரன், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செட்நெக்ஸ்ட் ஏஐ நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை மில்கி மிஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. சதீஷ் குமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.
“இளையராஜாவின் இசைப்பயணத்தில் நாமும் பங்கேற்றிருப்பது பெருமை”
நிகழ்ச்சி குறித்து மில்கி மிஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. சதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை திண்டுக்கல்லில் கொண்டாடுவது மிகவும் பெருமைக்குரிய விஷயம். வாழ்நாள் முழுவதும் இசைஞானியின் இசைப் பயணத்தில் நாமும் பங்கேற்றிருக்கிறோம் என்பது நம் அனைவருக்கும் சிறப்பான ஒன்றாகும்.”
என்று தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி குறித்து அருண் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு. அருண் கூறுகையில்:
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘ஜெயிலர்’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘விடுதலை’ உள்ளிட்ட பிரபல திரைப்படங்களுக்கு பிரம்மாண்டமான அரங்குகள் மற்றும் காட்சியமைப்புகளை உருவாக்கிய கலை இயக்குநர் கிரண், இந்த இசை நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார்.
இசை ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் பிரம்மாண்டமான மேடை அமைப்புடன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.”
என்று தெரிவித்தார்.